கொங்குநாடு மருத்துவமனையில் கோடை சிறப்பு சலுகையில் அனைத்து அறுவை சிகிச்சைகள்: ஏப்ரல் 1 முதல் மே 31 வரை நடக்கிறது

 

கோவை, மார்ச் 29: கோவை டாடாபாத் பகுதியில் உள்ள கொங்குநாடு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜு கூறியதாவது, ‘‘கொங்குநாடு மருத்துவமனை 375 படுக்கைகளுடன், அனைத்து நோய்களுக்கும் கைதேர்ந்த அனுபவமிக்க சிறப்பு டாக்டர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக கோடை கால சிறப்பு பேக்கேஜ் சலுகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டும் ஏப்.1 முதல் மே 31 வரை நடைபெறுகிறது. இந்த பேக்கேஜ் முறையில் மருத்துவமனை பில், மருந்து பில், டாக்டர் பில் அனைத்தும் அடங்கும். சிறப்பு சலுகையில் சிறுவர்களுக்கு, பெண்களுக்கு, ஆண்களுக்கு அனைத்து பொது அறுவை சிகிச்சைகளும் செய்யப்படும்.

லேப்ராஸ்கோபியில் செய்யப்படும் அப்பெண்டிக்ஸ், ஹொனியா, பித்தப்பை அகற்றுதல், கர்ப்பப்பை அகற்றுதல், குடல் இறக்கம், வயிற்றில் கட்டி அறுவை சிகிச்சை, முகம் மார்பு, வயிறு சீரமைப்பு அறுவை சிகிச்சை, சர்க்கரை பாத பராமரிப்பு அறுவை சிகிச்சை, இரத்த குழாய் அடைப்பை நீக்க ஸ்டெண்ட், பைபாஸ் சிகிச்சைகள் சிறப்பு சலுகையில் செய்யப்படுகிறது. இதே போல எலும்பு முறிவு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை,சிறுநீரக ஆபரேசன்கள், சிறுநீர்பாதை அடைப்பு நீக்கம், மூளை நரம்பு, தண்டுவட அறுவை சிகிச்சை, புற்றுநோயியல் , ரத்த நாளம், இருதய அறுவை சிகிச்சை போன்றவையும் செய்யப்படுகிறது.

24 மணி நேரமும் இயங்கும் விபத்து சிகிச்சை மையம், ஆம்புலன்ஸ் வசதியுடன் சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ நிபுணர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆபரேசன் செய்து கொள்வோர் விருப்பமான தேதியையும், நேரத்தையும் பதிவு செய்து, ஏப்ரல் 1 முதல் மே 31 வரை எப்போது வேண்டுமானாலும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7094316000 என்ற என்னை தொடர்புகொள்ளலாம்’’ என்று அவர் கூறினார். அப்போது கொங்குநாடு மருத்துவமனை மெடிக்கல் டைரக்டர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு உடனிருந்தார்.

 

Related Stories: