வாக்குப்பதிவின்போது கட்சியினர் தலையீடு இருக்க கூடாது

 

திருப்பூர், மார்ச் 21: வாக்குப்பதிவின்போது அரசியல் கட்சியினர் தலையீடு இருக்க கூடாது என சப் கலெக்டர் சிவப்பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. சப்-கலெக்டா் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். இதில், குடிமைப்பொருள் தாசில்தார் ராகவி முன்னிலை வகித்தார். இதில், சப் கலெக்டர் சிவப்பிரகாஷ் பேசியதாவது: வாக்குச்சாவடியில் பாதுகாப்பு வசதிகள் குறித்து கண்காணிக்க வேண்டும். வாக்களார்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது. பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளதா என்பதை அறிய வேண்டும். இதுதவிர தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். வாக்குப்பதிவு உரிய முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் தலையீடு இருக்க கூடாது.

Related Stories: