திருப்பூர், மார்ச் 23:திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 442 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் 19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இதில் ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேர்தல் பார்வையாளர் சரிகா மோகன் ஆய்வு செய்தார். இந்நிலையில் மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் சப் கலெக்டர் சிவப்பிரகாஷ், தாசில்தார் கண்ணாமணி மற்றும் தோ்தல் துணை தாசில்தார் ராசு உள்பட அதிகாரிகள் பங்கேற்றனா்.
