காங்கயம், மார்ச் 27: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கணினி தரவு வழங்கிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவை மண்டலம், பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில், காங்கயம் கோட்டத்திற்குட்பட்ட பிரிவு அலுவலகங்களில் இணையவழியில் மின்கட்டணம் செலுத்தும் சேவை மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை இயங்காது. இந்த தகவலை காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
