100% வாக்காளிக்க வலியுறுத்தி கலைநிகழ்ச்சி

 

திருப்பூர், மார்ச்29: சட்டமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மனிஷ் நாரணவரே பல்லடம் வட்டம் கணபதிபாளையம் மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரமபதம் விளையாடி,மாதிரி வாக்கு பதிவு மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சங்கமித்திரை,மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ்குமார்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி இயக்குநர் (பயிற்சி) ஹர்ஷா, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: