பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை

திருப்பூர், மார்ச் 24: திருப்பூர் பொம்மநாயக்கன் பாளையத்தைசேர்ந்தவர் ரவி ( 27). பனியன் நிறுவன தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

பின்னர் ரவி, ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து ரவி மீதான வழக்கு, திருப்பூர் மாவட்ட எஸ்சிஎஸ்டி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதி சுரேஷ் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ரவிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும்,ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோகரன் ஆஜராகி வாதாடினார்.

 

 

Related Stories: