காங்கயம், மார்ச் 24:காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள், 59 மூட்டை கொப்பரைகளை கொண்டு வந்திருந்தனர். இதில் குறைந்தபட்சமாக கிலோ ரூ.118.66க்கும், அதிகபட்சமாக ரூ.154.50க்கும் ஏலம் போனது. ெமாத்தம் 2 ஆயிரத்து 799 கிலோ எடையுள்ள கொப்பரை 4 லட்சத்து 29 ஆயிரத்து 280 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என கூடத்தின் கண்காணிப்பாளர் அழகிரி சாந்தலிங்கம் தெரிவித்தார். 6 வியாபாரிகள் கலந்து கொண்டு கொள்முதல் செய்தனர்.
