தியாகிகள் தின உறுதிமொழி ஏற்பு

 

திருப்பூர்,மார்ச்24: இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தூக்கு தண்டனை பெற்ற பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு தினம் நேற்று தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்தாண்டு தியாகிகள் தினமான மார்ச் 23ம் தேதியை யுத்த எதிர்ப்பு மற்றும் உலக சமாதான நாளாக கடைபிடிக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐடியுசி சார்பில் ஏஐடியூசி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் மோகன் தலைமையில், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, போர் வெறிக்கு எதிராகவும், தொழிலாளர் நலன் காக்கவும், முதலாளித்துவ சுரண்டலை ஒழிக்கவும் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பனியன் சங்கத் துணைத் தலைவர் ரவி, பொதுச்செயலாளர் சேகர், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: