அதிமுக கேண்டிடேட் லிஸ்ட்டில் நாடார், நாயுடு சமூகத்தினர் புறக்கணிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாஜவிற்கும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி ஜான் பாண்டியன் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சாத்தூர் வேட்பாளராக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா, விருதுநகர் தொகுதியில் சிவகாசி பட்டாசு தொழிலதிபர் சன்சைன் கணேசன், அருப்புக்கோட்டையில் சேதுபதி அறிவிக்கப்பட்டுள்ளனர். திருச்சுழி தொகுதியில் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட அதிமுக, கூட்டணி வேட்பாளர் தேர்வில், நாடார், நாயுடு சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக புகைச்சல் கிளம்பியுள்ளது. 7 தொகுதியிலும் நாடார், நாயுடு சமூகத்தினர் அதிகளவில் இருந்த போதிலும் முக்கியத்துவம் கொடுக்காமல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது இரண்டு சமுதாய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக விருதுநகர் தொகுதியில் நாயுடு சமுதாய வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என காத்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக அதிமுகவில் உள்ள நாயுடு சமுதாய நிர்வாகிகளே அதிருப்தி அடைந்துள்ளனர். அதிமுகவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: