அன்னவாசல் பேரூராட்சியில் பள்ளுரணிகுளத்தில் ரூ.44 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணி

இலுப்பூர், மார்ச் 28: அன்னவாசல் பேரூராட்சியை சேர்ந்த பள்ளுரணி ரூ.44 லட்சம் மதிப்பில் குள மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்னவாசலில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் குளம் பள்ளுரணி குளம். இக் குளத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கும் துணிகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இக்குளம் அன்னவாசல் விராலிமலை சாலையில் அமைந்துள்ளதால் சாலை மார்க்கமாக வாகன ஓட்டிகள் மற்றும் விசேஷ காலங்களில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இக்குளத்தை பெரிதும் பயன்படுத்து வருகின்றனர்.

இக்குளத்தில் கழிவு நீர் கலப்பதில்லை. மேலும் இக்குளத்தில் மழைநீர் பெருகாத நிலையில் அருகில் உள்ள விவசாய பாசன குளத்தில் இருந்து பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டு குளத்தை நிறப்பி பயன்படுத்துவது வழக்கம். ஆகையால் வருடத்தின் அனைத்து மாதங்களிலும் இக்குளம் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இக்குளத்தை மேம்பாடு செய்ய ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சுற்றுச்சுவர், நடைபாதை, படித்துறை மற்றும் குளத்தை சுற்றி வேலிகள் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேம்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு மிகவும் பயனாக உள்ளது.

 

 

Related Stories: