அறந்தாங்கி, மார்ச் 28: ஆவுடையார்கோயிலில் தேர்தல் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்றார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோயிலில் 2026 -சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம் ஆகியவற்றின் மூலம் பொது மக்களுக்கு ஆவுடையார் கோவில் கடைவீதி மற்றும் நான்கு மாட வீதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி தேர்தல் நடத்தும் அலுவலரும் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியருமான அபிநயா, தனி வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், பார்த்திபன், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டு பொதுமக்களுகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
