பொன்னமராவதி, மார்ச் 28: பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் ரூ.30லட்சம் மதிப்பில் சமுதாயக்கூட்டம் கட்டப்படுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாரதி மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம்.
வார்பட்டு கிராமத்தில் பொது பயன்பாட்டிற்கு சமுதாயக்கூடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து அமைச்சர் ரகுபதியின் முயற்சியால் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்ஆர் பாரதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.30லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமுதாயக்கூடம் கட்டப்பட்டு திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வார்பட்டு கிராமத்தில் சமுதயாக்கூடம் அமைத்துக்கொடுத்த திராவிட மாடல் அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
