அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரை தேடி வந்த புள்ளிமான் பலி

ஊத்துக்கோட்டை, மார்ச் 27: பெரியபாளையம் அருகே, முக்கரம்பாக்கம் வனப்பகுதியில் இருந்து அதிகாலையில், இரை தேடி வந்த பெண் புள்ளி மான் ஒன்று வழி தெரியாமல் ஊருக்குள் வந்தது. அப்போது, பொதுமக்களை பார்த்து மிரண்டு, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய போது, ஆத்துப்பாக்கம் பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து, சீத்தஞ்சேரி-செங்குன்றம் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த வனத்துறையினர் இறந்த மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சீத்தஞ்சேரி வனத்திலேயே மானை அடக்கம் செய்தனர்.

Related Stories: