மகாவீர் ஜெயந்தி தினத்தில் இறைச்சி கடைகளை மூட வேண்டும்

திருவள்ளூர், மார்ச் 27: திருவள்ளூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினமான வரும் 31ம் தேதி அனைத்து இறைச்சி கடைகள் கட்டாயம் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கூடங்களான இறைச்சி வெட்டுமிடம் மற்றும் இறைச்சிகளை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் கட்டாயம் மூடப்பட வேண்டும் என அவைகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், அரசு விதிமுறைகளுக்கு எதிராக மகாவீர் ஜெயந்தி தினத்தன்று செயல்படும், அனைத்து இறைச்சி கூடம் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட உள்ளாட்சி துறைகளுக்கு ஆவடி மாநகராட்சி ஆணையர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி ஆணையர்கள், அனைத்து செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: