கரூர்: கரூரில் தவெக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்க கூப்பன்கள் விநியோகம் செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் கரூர் சின்னாண்டான் கோயில் பகுதியில் உள்ள தவெக மாவட்ட அலுவலகத்தில் பறக்கும் படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பரிசு பொருட்கள் கூப்பன் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனைக்கு பின்னர் அலுவலக சுவரில் வரையப்பட்டிருந்த கட்சி கொடி வண்ணம், கொடிக்கம்பம் உள்ளிட்ட கட்சி அடையாளங்களை அகற்றுமாறு அலுவலகத்தில் இருந்த தவெக தொண்டர்களிடம் அறிவுறுத்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
