சென்னை: புதுச்சேரியில் தவெக கூட்டணியில் உள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு பொது சின்னம் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேயம் கட்சியின் தலைவர் நேரு (எ) குப்புசாமி தங்கள் கட்சிக்கு பொது சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பிறகு கட்சி பதிவு செய்யப்பட்டால் மனுதாரர் பொது சின்னம் கோர முடியாது. அடுத்த தேர்தல்களில் மனுதாரர் பொது சின்னம் கேட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
புதுச்சேரி தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக கூட்டணியில் உள்ள கட்சிக்கு பொது சின்னம் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
- உயர் நீதிமன்றம்
- விஜய்
- டெவாகா
- புதுச்சேரி
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- நேயம் மக்கள் கழகம்
- நயம்
- நேரு (அ) குப்புசாமி
