குழாய்வழி இயற்கை எரிவாயுக்கு மாறாவிட்டால் வீடுகளுக்கு சமையல் காஸ் சப்ளை நிறுத்தப்படும்: 3 மாதம் மட்டுமே அவகாசம்; ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: குழாய்வழி இயற்கை எரிவாயு சப்ளை உள்ள மாறத் தவறினால், வீடுகளுக்கான சமையல் எரிவாயு LPG விநியோகம் நிறுத்தப்படும் என்று அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: மேற்கு ஆசியாவில் நடக்கும் போரினால் முக்கிய ஆதாரங்களில் இருந்து விநியோகம் தடைபட்டு, இந்தியா சமையல் காஸ் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வகைப்பட்ட விநியோகத்தின் மூலம் பெறப்படும் மிகவும் வசதியான மாற்றான குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு (பிஎன்ஜி) மாறுமாறு வீடுகளையும் வணிகப் பயனர்களையும் அரசு வலியுறுத்துகிறது. குழாய்கள் மூலம் சமையலறை அடுப்புகளுக்கு பிஎன்ஜி தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதால், மீண்டும் நிரப்ப முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் நீக்கப்படுகிறது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், குழாய் உள்கட்டமைப்பை விரைவுபடுத்துதல், ஒப்புதல்களை எளிதாக்குதல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் எல்பிஜி-யிலிருந்து பிஎன்ஜி-க்கு மாறுவதை ஊக்குவித்தல் ஆகிய இலக்குகளைக் கொண்ட இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் ஆணை, 2026ஐ அறிவித்துள்ளது. வீட்டில் பிஎன்ஜி வசதி இருந்தபோதிலும் அவர்கள் அதைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், மூன்று மாதங்களுக்குப் பிறகு சமையல்காஸ் விநியோகம் நிறுத்தப்படும். இருப்பினும், குழாய் இணைப்பு வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றதாக இருக்கும் பட்சத்தில், தடையில்லாச் சான்றிதழுக்கு உட்பட்டு விநியோகத்தைத் தொடர இந்த விதிமுறை அனுமதிக்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: