புதுடெல்லி: திடீர் உடல்நல குறைவு காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு 10.22 மணிக்கு டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் அவரது வயிறு மற்றும் சிறுநீர் பாதையில் தொற்று உள்ளதா என்பதை அறிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
