கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிபூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அதிகாரியாக உள்ள சூரஜித் ராயை, தேர்தல் ஆணையம் அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இத்தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜ தலைவர் சுவேந்து அதிகாரியும் களத்தில் உள்ளனர். சூரஜித் ராய்க்கு பா.ஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரியுடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் எழுதிய கடிதத்தில்,‘2011ஆம் ஆண்டு தேர்தல் அதிகாரி சூரஜித் ராய், இதற்கு முன்பு நந்திகிராம்-II வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றியவர். அவர் சுவேந்து அதிகாரியின் நண்பர். எனவே தேர்தல் அதிகாரியாகத் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் சூரஜித் ராயின் சுதந்திரத்தன்மை மற்றும் திறமை குறித்து நம்பத்தகுந்த ஐயப்பாடுகள் நிலவுகின்றன. எனவே சூரஜித் ராயின் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
