ராகுல் காந்தியின் கேரள தேர்தல் பிரசாரம் ரத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் கூட இல்லை. இதனால் இங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று கோழிக்கோட்டில் பிரசாரம் செய்ய தீர்மானித்திருந்தார். கோழிக்கோடு கடற்கரையில் காங்கிரஸ் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தியின் கேரள வருகை ரத்து செய்யப்பட்டது.

Related Stories: