இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற 7 துணை ராணுவ வீரர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த 7 துணை ராணுவ வீரர்கள், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை மீறி இப்தார் விருந்து ஒன்றில் பங்கேற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், அவர்கள் மீது தேர்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த ஏழு வீரர்களில் இருவர் மத்தியப் படைகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய ஐந்து பேரும் அம்மாநிலத்தை விட்டு வெளியே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்தது. இதுதொடர்பான படங்கள், வீடியோக்கள் வைரலானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,’இந்தச் சம்பவத்தை தேர்தல் ஆணையம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. தேர்தல் பணிக்காக நியமிக்கப்படும் வீரர்கள் எந்தவொரு சமூக நிகழ்ச்சியிலும் பங்கேற்கவோ அல்லது உள்ளூர் நபர்களிடமிருந்து எந்த வடிவத்திலான விருந்தோம்பலையும் ஏற்றுக்கொள்ளவோ ​​அனுமதிக்கப்படுவதில்லை’ என்று தெரிவித்தார்.

Related Stories: