ஒன்றிய அரசின் அலட்சியத்தால் கேஸ் தட்டுப்பாடு விறகு அடுப்பில் சமையல் செய்து சமாளிக்கும் தமிழக அரசு சமையலர்கள்

*தடையின்றி நடக்கும் சமையல்கள்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும், மாணவ-மாணவி விடுதிகளிலும், இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான ஆலயங்களில் சமைப்பதற்கு தமிழக அரசு அரிசி, பருப்பு, எண்ணை, மாளிகை பொருள்கள் மற்றும் காய்கறி வழங்கி சமையலர்களை அமர்த்தி உள்ளது. மேலும் தமிழக அரசு சமையலுக்கு தேவையான கேஸ் சிலிண்டர்கள் வாங்க உதவி தொகை வழங்கி வருகிறது.

இதன் மூலம் சிலிண்டர் வாங்கி சமையலர்கள் பயன்படுத்தி எளிதாக சமைத்து வந்தனர்.
தற்சமயம் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டு உள்ள போரால் கடும் கேஸ் சிலிண்டர் தட்டுபாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.

கேஸ், பெட்ரோல், டீசல் போன்றவற்றை கையாளும் ஒன்றிய அரசின் அலட்சியத்தால் மருத்துவமனை, மாணவ, மாணவியர்களின் விடுதிகள், கோயில் அன்னதான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உணவு தயார் செய்வதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவு சமைப்பதற்கு சமையலர்கள் திண்டாடி வருகின்றனர்.

இருப்பினும் தமிழக சமையலர்கள் தற்சமயம் மாணவ- மாணவிகளுக்கும், பக்தர்களுக்கும், மருந்துவமனை உள்பயனாளிகளும் உணவுக்கு சிரமம்பட கூடாது என கட்டிடத்திற்கு வெளிபுறம் அஸ்திவார கருங்கற்களை பயன்படுத்தி அடுப்பு போன்ற அமைப்பை ஏற்படுத்தி, விறகு கொண்டு சமையல் செய்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்சமயம் கேஸ் தட்டுபாடு இருந்தாலும் தமிழக அரசு சமையலர்கள் திறம்பட செயல்பட்டு உணவு பற்றாகுறையை நிவர்த்தி செய்து வருகிறார்கள். இந்துசமய அறநிலைதுறை ஆலயங்களில் உணவு அளிந்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பக்தர்கள் நன்றி கூறுகிறார்கள்.

Related Stories: