பூம்புகாரில் இதுவரையில் இல்லாத ரூ.66 கோடியில் மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள்

*சொன்னதை செய்து காட்டிய திராவிட மாடல் அரசு

சீர்காழி : சீர்காழி அருகே பூம்புகாரில் இதுவரை இல்லாத வகையில் ரூ.66 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு திராவிட மாடல் திமுக அரசு சாதனை புரிந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகார் என்றாலே கண்ணகியும் கோவலனும் சிலப்பதிகாரமும் தான் நமக்கு நினைவுக்கு வரும். காப்பியமும் வரலாறும் கலந்ததுதான் பூம்புகார் என்கிற காவிரிப்பூம்பட்டினம் பூம்புகாரில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளம் அமைந்துள்ளது.

இங்கு சிலப்பதிகாரத்தின் பெருமையை போற்றும் வகையில் 1973 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி கோவலன் கண்ணகி வாழ்ந்த பூம்புகாரை பெருமைப்படுத்தும் வகையில் சிலப்பதிகார கலைக்கூடம் கோவலன் கண்ணகி மாதவி நுழைவாயில்கள் நெடுங்கால் மன்றம் பாவை மன்றம் சிற்பக் கலையுடன் கிளிஞ்சல் நத்தை அழகிய குடியிருப்புகள் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு கோவலன் கண்ணகி வாழ்ந்த பூம்புகாரை கலை நயத்துடன் மக்கள் பார்வைக்கு கண் முன் நிறுத்தினார்.

மேலும் பூம்புகார் கடலில் அகழ்வாராய்ச்சி பணியை கலைஞர் 1980 களில் தொடங்கி வைத்தார். அப்போது பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மனித கட்டுமானங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டன.

தற்போதைய திராவிட மாடல் அரசு திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியில் இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழக உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் பேராசிரியர் ராஜன் தலைமையில் ஒரு குழுவினர் தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது சோழ மன்னர்களால் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு துறைமுகம் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்ததாக தெரியவந்துள்ளது. மேலும் 40 கி.மீ தூரத்தில் துறைமுகம் புதையுண்டு கிடப்பதாகவும் ஆய்வில் தெரியதுள்ளது.

சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் இந்த துறைமுகம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூம்புகார் சுற்றுலா தளம் உலக தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இதேபோல் மீனவர்களின் நலன் கருதி வலை பின்னும் கூடம், முகத்துவாரம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் 90% முடிந்து உள்ளது. மீதம் உள்ள பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வாகனங்கள் நிறுத்துமிடம் பேருந்து நிலையம், தங்கும் விடுதி, நிழல் தரும் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன குறிப்பாக பூம்புகார் சுற்றுலா மையத்தின் நுழைவாயிலில் பழமை காலத்தில் சோழர்கள் பயன்படுத்திய பயன் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை சுற்றுலா வரும் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்பி எடுத்து செல்கின்றனர். கடந்த அதிமுக பத்தாண்டு கால ஆட்சியில் பூம்புகார் சுற்றுலா மையத்தில் குறிப்பிடும் அளவில் எந்த பணியும் தொடங்கவில்லை.

ஆனால் திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞரால் உருவாக்கப்பட்ட பூம்புகார் சுற்றுலா மையத்தை தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பொலிவு படுத்தும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பூம்புகாரூக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளார்.

Related Stories: