பழநி, மார்ச் 18: பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் சூறாவளி காற்று வீசியது. இதில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தது. மின்சாரம் பல மணிநேரம் தடை பட்டது. பழநி அருகே கோம்பைபட்டியில் தென்னை மரங்கள் சாய்ந்தது. புளியம்பட்டியில் சேது என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த ஒட்டு முருங்கை மரங்கள் 100க்கும் மேற்பட்டவை சாய்ந்தன.
