விபத்தில் தொழிலாளி படுகாயம்

 

நத்தம், மார்ச் 18: மேலூர் அருகே கேசம்பட்டியை சேர்ந்தவர் பம்பக்காளை (50). சமையல் தொழிலாளி. இவர் நத்தத்தில் இருந்து கேசவம்பட்டிக்கு செல்வதற்கு பஸ் நிலையத்தில் காத்திருந்தார். பஸ் நிலைய வளாகத்தில் பழநி- காரைக்குடி அரசு பஸ்சின் பக்கவாட்டில் இவர் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். இதனை கவனிக்காத பஸ் டிரைவர் பகவதிவேல் (56), பஸ்சை இயக்கியதாக தெரிகிறது. இதில் பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் பம்பக்காளையின் இரு கால்களும் முறிந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: