இரண்டு பேரிடம் ரூ.1 கோடி மோசடி

 

சிவகங்கை, மார்ச் 18: சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1 கோடி பணம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பத்தூர் அருகே அ.தெக்கூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(29). வெளிநாட்டில் வேலை பார்த்தவர். இவர், கடந்த மாதம் பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய நபர் தான் சொல்லும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பி பல தவணைகளில் ரூ.26லட்சத்து 21 ஆயிரத்தை பாலசுப்ரமணியம் அனுப்பி உள்ளார்.
பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுபற்றி சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

Related Stories: