போலீசார் அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே கட்சியினர் பிரசாரம் செய்ய வேண்டும்

 

சிவகங்கை, மார்ச் 18: போலீசார் அனுமதி அளித்துள்ள இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும் என கலெக்டர் பேசினார்.  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்களவை தேர்தலையொட்டி விதிமுறைகளை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் அனைவரும் முறையாக கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி சிவபிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் பொற்கொடி பேசியதாவது:தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், ப்ளக்ஸ் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள், தெரு முனைக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரங்களுக்கென அனைத்து வகையான அனுமதிக்கு விண்ணப்பித்து, அதற்கான அனுமதிகளை பெற்றுக் கொள்ளலாம்.

Related Stories: