மதுரை, மார்ச் 18: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதன்படி தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று 109 பள்ளிகள் மற்றும் மத்திய சிறைச்சாலை உள்பட 110 தேர்வு மையங்களில் கணிதம், வணிகவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல், நர்சிங் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
