திண்டுக்கல் மாவட்ட மாணவ- மாணவிகள் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

 

திண்டுக்கல், மார்ச் 18: திண்டுக்கல் மாவட்டத்தில் 2026- 2027ம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வசதியுடன் விளையாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2026- 2027ம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக்கு 17 வயது முதல் 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். 01.07.2001 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும், 01.07.2009 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

Related Stories: