பயிற்சி முகாம்

 

பழநி, மார்ச் 18: பழநியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் உணவு பொருட்களில் கலப்படம் செய்வதை கண்டறியும் பயிற்சி முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். இம்முகாமில்உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வதால் ஏற்படும் தீமைகள், நோய்களின் வகைகள், கலப்படத்தை கண்டறியும் முறைகள், கலப்படம் செய்யும் குற்றத்திற்கான தண்டனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இதில் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: