தமிழகத்தில் கோடை காலத்தையொட்டி குடிநீர் ஆலைகளை ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவு

 

சென்னை: தமிழகத்தில் கோடை காலத்தையொட்டி குடிநீர் ஆலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நடப்பாண்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் கேன் குடிநீர் நிறுவனங்கள் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறு தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் குடிநீர் கேன் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றுவது அவசியம் என்றும், தரம் மற்றும் முறையான அனுமதி இல்லாமல் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

குறிப்பாக கேன்களில் நிறுவனம் மற்றும் உற்பத்தியாளர் பெயர், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி கட்டாயம் இருக்க வேண்டும். கேன் தண்ணீரை நேரடியாக சூரிய ஒளியில் தேக்கி வைக்கக் கூடாது, கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது கேன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும், பாசை பிடித்து கேன் தண்ணீரை விற்பனை செய்து விதிகளை பின்பற்றாத கடைகளின் உரிமையாளர்களுக்கு மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

அதே போல விதிமுறைகளை மீறும் கடைகள் மற்றும் ஆலைகளுக்கு தலா 5,000 அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்சியம் ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லி கிராம் என்ற அளவிலும் மெக்னீசியம் ஒரு லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லி கிராம் என்ற அளவிலும் இருப்பதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

Related Stories: