சென்னை: நடிகையும், பாஜ மாநில துணை தலைவருமான குஷ்பு, தனது பெயரில் போலி இ-மெயில் அனுப்பப்படுவதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அதிகாரத்தில் இருக்கும் முக்கிய நபர்களுக்கு எனது பெயரில், போலி கணக்கில் இருந்து இ-மெயில் அனுப்பப்படுகிறது. அதில், ‘உங்களை போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. உங்களுடன் மீட்டிங் நடத்த வேண்டும்’ என்று மெசேஜ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான் யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால், அவர்களிடம் தனிப்பட்ட முறையில் அப்பாயின்மெண்ட் வாங்கிய பிறகுதான் நேரில் வருவேன். அதனால், இதுபோன்ற போலி இ-மெயில்களை நம்பி அதற்கு பதிலளிக்க வேண்டாம். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
