மேற்குவங்கத்தில் ஒரே கட்ட தேர்தல்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

 

மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 2021ல் நடந்த தேர்தலில் அதிகபட்சமாக 8 கட்டமாக நடத்தப்பட்டது. இந்த முறை 3 அல்லது 4 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில் முழு தேர்தல் கமிஷன் அமர்வும் நேற்று மேற்குவங்க தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்தது.

தேர்தல் குழுவை சந்தித்த பிறகு வெளியே வந்த மேற்கு வங்க மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் முகமது சலீம் கூறுகையில்,’ பல கட்டத் தேர்தல்கள் சமூக விரோத சக்திகள் இடங்களுக்குச் செல்வதற்கு உதவுகின்றன. தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று நாங்கள் குறிப்பாகக் கோரினோம்.

இல்லையென்றால், அதிகபட்சமாக இரண்டு கட்டங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்ஐஆர் முடிந்த பிறகு வாக்காளர் பட்டியலில் அனைத்து உண்மையான வாக்காளர்களும் சேர்க்கப்பட வேண்டும்’ என்றார்.

Related Stories: