பாஜ மாநில துணை தலைவர் கொதிப்பு; திரிஷா குறித்து நயினார் சொன்னதுக்கு உருட்டினாங்களே…

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரிஷா குறித்து நயினார் சொன்னபோது சிலர், ஏதோ இல்லாததை சொன்னது ேபால, இவர்கள் எல்லாம் போட்டு உருட்டோ உருட்டென்று உருட்டினார்கள். இப்போது அவரது சம்சாரமே, என் புருஷனை காப்பாத்துங்க என்று கோரிக்கை வைத்துள்ளார். எனவே மீடியாக்கள் நாங்கள் சொல்லும் கமென்ட்டுகளை எடுத்துப் போடுவதை விட்டுவிட்டு வேறு வேலைகளை பார்க்க வேண்டும்.

நயினாருக்கு நான் போட்ட பதிவும் எனது அனுபவத்திற்கும், வயதுக்கும் நான் வழங்கிய அட்வைஸ் தான். அதில் அதிருப்தியெல்லாம் யாருக்கும் இல்லை. நாங்கள் அமைத்துள்ளது மிகப்பெரிய கூட்டணி. ஆட்சி மாற்றத்திற்கு இந்தப்பெரிய அணியே போதுமானது. அதை விட்டு விட்டு ஆந்திராவில் பேசினார்கள். ெதாடர்ந்து பேசுகிறார்கள் என்று தகவல்களை போடுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: