புதுச்சேரியில் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் துவங்க உள்ளது. காங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த சூழலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேச புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் திடீரென நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். நாடாளுமன்ற கூட்டம் நடந்து வரும் நிலையில், அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்திலிங்கம் எம்பி ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார்.
இவர்கள் அனைவரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, சந்தித்து பேசுகின்றனர். அப்போது புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வழங்கி, இந்த வேட்பாளர்களை மாற்றினால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும். எனவே, தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை திமுக தலைமையிடம் பேசி, பெற்று தருமாறு வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
