ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

வருசநாடு, மார்ச் 9: மயிலாடும்பாறை கிராமத்தில் அதிமுக கட்சியில் இருந்து 50 விலகிய கிளை செயலாளர் ராஜா, அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி, அதிமுக மகளிர் அணி தாயம்மாள் ஆகியோர் திமுக கட்சி இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி மகாராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு கறுப்பு சிவப்பு துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி தங்கப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி ஒன்றிய கவுன்சிலர் மச்சக்காளை, மயிலை போஸ், தொழில்நுட்பப் பிரிவு மயிலை பிரபு வினோத்குமார், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி சரவணன் உள்ளிட்ட திமுக கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: