சட்டமன்ற தேர்தல் காங்கிரசார் ஆலோசனை

திருப்பூர், மார்ச் 9: திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் ராஜூவ் பவனியில் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் கோபால்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.இதில் ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஈஸ்வரன், துணைத்தலைவர் கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்ல கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் வடக்கு அல்லது தெற்கு தொகுதியில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆவன செய்ய வேண்டும்.பனியன் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை உற்பத்தியாளர்கள் உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Related Stories: