வாடிப்பட்டி, மார்ச் 9: வாடிப்பட்டி அருகே ராமையன்பட்டியை சேர்ந்தவர் தினகரன் (48). விவசாயி. இவர் நேற்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது உள்ளே மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனே வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் நிலைய அதிகாரி பாலச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தோட்டத்தில் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பிடித்து ஆண்டிபட்டி பங்களாவில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் வனத்துறையினர் குலசேகரன்கோட்டை வனப்பகுதிக்கு கொண்டு சென்று மலைப்பாம்பை விடுவித்தனர்.
