மதுரை மாநகராட்சிக்கு 20 கம்ப்யூட்டர் வழங்கல்

மதுரை, மார்ச் 9: மதுரை மாநகராட்சியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் தனியார் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.5.09 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 20 கம்ப்யூட்டர்களை (15 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்ஸ் மற்றும் 5 லேப்டாப் கம்ப்யூட்டர்ஸ்) வாங்கப்பட்டு அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயனிடம் ஒப்படைத்தனர்.

புதிய கம்ப்யூட்டர்கள் மாநகராட்சியின் 5 மண்டல உதவி கமிதஷனர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி கமிஷனர் (கணக்கு) ஆகியோர் அலுவலக பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் தலைமை பொறியாளர் பாபு, உதவி கமிஷனர் (கணக்கு) முகமது அலி ஜின்னா, உதவி கமிஷனர்கள் ரவிக் குமார், ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், காமராஜ், முத்து, மயிலேறிநாதன், இந்திரா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: