உடுமலை அண்ணா குடியிருப்பில் குடிநீர் விநியோகத்தில் குளறுபடி

உடுமலை, மார்ச்9: உடுமலை நகராட்சி பகுதிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து குடிநீர் எடுத்து விநியோகிக்கப்படுகிறது. உடுமலை அண்ணா குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கும் திருமூர்த்தி குடிநீர் வழங்கப்படுகிறது.அதேநேரம், அண்ணா குடியிருப்பில் வீட்டு எண் எல்.35 முதல் எல்.40 வரையிலான வீடுகளுக்கு மட்டும் குடிநீர் வருவது இல்லை. இதனால் அங்கு குடியிருப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “அண்ணா குடியிருப்பில் 6 வீடுகளுக்கு மட்டும் முறையாக குடிநீர் வருவதில்லை.நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் குடிப்பதற்கு கூட தண்ணிரின்றி அவதிப்படுகிறோம். தற்போது கோடை துவங்கி உள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது. இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கும், நகராட்சி ஆணையருக்கும் மனு அனுப்பி உள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

 

Related Stories: