மதுபாட்டில்கள் பறிமுதல்

போடி, மார்ச் 9: போடி தாலுகா காவல் நிலையம் எஸ்.ஐ விஜய் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  போடி அருகே விசுவாசபுரம் சுடுகாடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதியை சேர்ந்த சரவணன் (31) அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார், சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: