புதிய அங்கன்வாடி மையங்கள் எம்எல்ஏ சரவணக்குமார் திறந்து வைத்தார்

தேனி, மார்ச் 9: பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்படட ஜல்லிப்பட்டி மற்றும் வடபுதுப்பட்டி ஊராட்சியில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை சரவணக்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜல்லிப்பட்டி, வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சொக்கத்தேவன்பட்டி ஆகிய கிராமங்களில் தலா ரூ.17 லட்சத்து 25 ஆயிரம் என மொத்தம் ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு தொகுதியில் இருந்து அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன.

இந்த அங்கன்வாடி மையங்களை பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணக்குமார் திறந்து வைத்தார். இதில் சொக்கத்தேவன்பட்டி கிளை திமுக செயலாளர் செந்தில், ஜல்லிப்பட்டி கிளை செயலாளர் விஜயா, அம்மாபுரம் செல்வராஜ், காமக்காபட்டி ஜெயக்குமார், அம்மாபட்டி செல்வன், வீரஜக்கமாப்புரம் பழனிச்சாமி, தடமலை, ரவி, சருத்துப்பட்டி உதயசூரியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

 

Related Stories: