நபிகள் குறித்து ஆட்சேபகரமாக பேசிய வழக்கில் கைது கல்யாணராமன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

கோவை, பிப்.9: மேட்டுப்பாளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் இஸ்லாம் குறித்தும், முகமது நபிகள் குறித்தும் பல்ேவறு ஆட்சேபகரமான தகவல்களை பேசியதாக தெரிகிறது. இவர் பங்கேற்ற கூட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு இஸ்லாம் அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கல்யாணராமன் உட்பட 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி கல்யாணராமன் தரப்பில் கோவை மாவட்ட முதன்மை ேகார்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதை விசாரித்த நீதிபதி சக்திவேல், ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு (10ம் தேதி) ஒத்தி வைத்தார்.

Related Stories: