சங்கரன்கோவில்,பிப்.25: சங்கரன்கோவில் நகராட்சி 25வது வார்டு பகுதியில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் பிரசார இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பிரசார இயக்கத்தை துவக்கி வைத்தார். விழாவில் வடக்கு மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், மகளிர் அணி அமைப்பாளர் சிவசங்கரி, மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணை செயலாளர் சுப்புத்தாய், மாவட்ட பிரதிநிதி டைட்டஸ் ஆதித்தன், ஐடி விங்க் சிவசங்கரநாராயணன், வார்டு செயலாளர் வெள்ளத்துரை, முன்னாள் வர்த்தக அணி பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவிலில் வெல்லும் தமிழ் பெண்கள் பிரசார இயக்கம்
- தமிழ் பெண்கள் பிரச்சார பிரச்சாரம்
- சங்கரன்கோவில்
- சங்கரன்கோவில் நகராட்சி
- தென்காசி
- வடக்கு மாவட்டம்
- ராஜா எம்.எல்.ஏ
- வடக்கு…
