புதுச்சேரி, பிப். 24: புதுச்சேரியில் விசிக தலைவர் திருமாவளவன் மீதான் வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2014ம் ஆண்டு வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாமக தலைவர்களை விமர்சித்து பேசினார்.இதில் கலவரத்தை தூண்டும் வகையிலும், அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் திருமாவளவன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையேற்று இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். விசிக தலைவர் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார்.
திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
- திருமாவளவன்
- புதுச்சேரி
- சென்னை உயர் நீதிமன்றம்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி
- வெங்கடசுப்ப ரெட்டியார் சதுக்கம்
