அடகு கடையில் நகை திருட்டு 2 பேருக்கு வலை

புதுச்சேரி, பிப். 20: புதுச்சேரி கேண்டீன் வீதியை சேர்ந்தவர் அபிஷேக்குமார்(33). இவர் சோலை நகரில் சொந்தமாக அடகு கடை நடத்தி வருகிறார். அதேபகுதியை சேர்ந்த சபரி மற்றும் பாரதி ஆகியோர் அடிக்கடி அபிஷேக்குமாரிடம் மதுகுடிக்க பணம் வாங்கி செல்வது வழக்கமாம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சபரி மற்றும் பாரதி ஆகியோர் பணம் கேட்டு அபிஷேக்குமாரின் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, அபிஷேக் பணம் தராத முடியாது என கூறியுள்ளார். தொடர்ந்து, இருவரும் பணம் தரும்படி அபிஷேக்கை தொல்லை கொடுத்துள்ளனர்.

அப்போது, அபிஷேக் போலீசை அழைத்து வருவதாக கூறி கடையில் இருந்த வெளியே சென்று, சிறிது நேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்தபோது, இருவரும் இல்லாதததை கண்டு நிம்மதி அடைந்தார்.பின்னர், கடையின் உள்ள சென்று நகைகள் பார்த்தபோது, அலமாரியில் இருந்த 3 கிராம் நகை இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் அபிஷேக் விசாரித்தபோது, சபரி, பாரதி இருவரும் அலமாரியை திறந்து பார்த்தாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும், நகை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அபிஷேக் புகார் அளித்தார். அதன்பேரில் சபரி, பாரதி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: