கடலுார், பிப். 18: கடலுார் துறைமுக போலீஸ் எஸ்ஐ எழிலரசி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பு பகுதியில் மீன்வலை பின்னும் கட்டிடம் அருகே 4 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த பழனி(48), ரகு (49), வேல்முருகன் (42), நாகராஜ் (73) என தெரிய வந்தது. இது குறித்து துறைமுக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
