அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உள்பட வடகிழக்கில் பனிப் புயல் வீச தொடங்கியதை அடுத்து அவசர நிலை அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உள்பட வடகிழக்கில் பனிப் புயல் வீச தொடங்கியதை அடுத்து அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர போக்குவரத்து தவிர அனைத்து வாகன போக்குவரத்துக்கும் நியூயார்க் மேயர் மம்தானி தடை விதித்தார். கடும் பனிப்பொழிவுடன் தீவிர பனி புயல் வீசுதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியூஜெர்சி உள்ளிட்ட பல இடங்களில் 90,000 வீடுகளில் ஏற்கெனவே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன், கனெக்டிகட், டெலாவெர், மேரிலேன்ட், விர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் டெலாவெர், மேரிலேன்ட், விர்ஜீனியா மாகாணங்களில் 10,000க்கும் மேற்பட்டோர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: