புதிய வாக்காளர்கள் மொபைல் செயலியில் மின்னணு அடையாள அட்டையை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

கரூர், பிப்.5: புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தவர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை இணையதளம் மற்றும் மொபைல் செயலிமூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2021ன் போது, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்த அனைத்து வாக்காளர்களும் இணையதளம் மற்றும் வோட்டர் ஹெல்ப்லைன் என்ற மொபைல் செயலி மூலமாக தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து, கொள்ளும் திட்டத்தை தேசிய வாக்காளர் தினமான கடந்த ஜனவரி 25ம்தேதி முதல் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. எனவே, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்த அனைத்து புதிய வாக்காளர்களும் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலமாக தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: