இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் காவல்துறை-தீவிரவாதிகளுக்கு இடையிலான துப்பாக்கிச் சண்டையில், 14 பாதுகாப்புப் படையினர் மற்றும் ஒரு குழந்தை உட்பட மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
